என்ஜினியர்கள் ஏன் இப்படி ஆகி விட்டார்கள்?
ஒரு
காலத்தில் என்ஜினியர்கள் என்றால் எப்படி இருந்தார்கள் தெரியுமா!
ஐடி
உச்சத்தில் போன போது எப்படியெல்லாம் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ரியல் எஸ்டேட் வணிகத்தைத்
தெறிக்க விட்டார்கள் தெரியுமா?
இன்று
என்ஜினியர்கள் டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4 எழுதி குமாஸ்தாக்களாக இருக்கிறார்கள்.
பி.இக்குப்
பிறகு ரிவர்ஸ் கியர் போட்டு, பி.எட் படித்து விட்டு ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
ஐயாயிரம்,
பத்தாயிரம் ஒப்பந்தப் பணிகளுக்கு இன்டர்வியூ என்றால் முதல் ஆளாக நிற்கிறார்கள்.
போகிற
போக்கைப் பார்த்தால் இன்றைய இன்ஜினியர்கள் நூறு நாள் வேலைத்திட்டம் வரை வந்து விடுவார்கள்
போலிருக்கிறது.
*****
கமலும் ரஜினியும் இணையும் படத்திற்கு
ஷங்கரை டிக் செய்தாதது ஏன்?
இந்தியன்
2 இல் தன்னை நாறடித்ததே போதும் என்று கமல் நினைத்திருக்கலாம்.
எந்திரன்
2 இல் தன்னைப் போரடித்ததே போதும் என்று ரஜினி நினைத்திருக்கலாம்.
இந்த
இரண்டு ஸ்டார்களை வைத்து எடுத்து அது மற்றுமொரு கேம் சேஞ்சர் ஆகி விட்டால் என்னாவது
என்று ஷங்கரே நினைத்திருக்கலாம்.
*****
இப்போதெல்லாம் கல்யாணத்திற்குப்
போகும் என்ன தோன்றுகிறது?
கூப்பிட்டு
இருக்கிற கூட்டத்துக்குச் சாப்பாடு கிடைக்குமா என்பதை விட, பைக்கைப் பார்க்கிங் பண்ண
இடம் கிடைக்காமல் என்ன பாடு படப்போகிறோம் என்று தோன்றுகிறது.
*****
தங்கம் விலை ஏறி விட்டதே! என்ன
செய்வது?
கவரிங்
நகைகளை விலை ஏற்றாமல்தான் வைத்திருக்கிறார்கள். ஆபத்துக்குப் பாவமில்லை. பிளாஸ்டிக்கில்
கூட தங்க நகைகள் வந்து விட்டன. வாங்கி ஜமாய்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
*****
ஐந்து கிலோ நூறு ரூபாய் என்பதன்
பொருள் என்ன?
நூறு
ரூபாய் நோட்டு பத்து ரூபாய் ரேஞ்சுக்கு வந்து விட்டது என்று பொருள்.
*****

No comments:
Post a Comment