ஒரு சிவப்புப் புள்ளி!
கோடம்பாக்கம்.
கனவுகளின் மயானம்.
அங்கே
டீக்கடைகளில் உலக சினிமா பேசும் உதவி இயக்குநர்கள், தையல் மெஷின் சிரிப்போடு கதவு தட்டும்
புது நடிகைகள் என விதவிதமான எரிநட்சத்திரங்களையும் பார்க்கலாம், அவற்றின் சாம்பல்களையும்
பார்க்கலாம்.
அந்த
ராஜ்யத்தின் அன்டர் கிரவுண்ட் ராஜாதான் இயக்குநர் விக்ரம் ஆதித்யா.
அவர்
படம் எடுத்தால் நேஷனல் அவார்ட் நிச்சயம். ஆனால் அவர் ஆபீஸுக்குள் ஒரு பெண் நுழைந்தால்,
அவளது பெண்மைக்கும் சுயமரியாதைக்கும் ஆப்பு நிச்சயம்.
அன்று
மாலை நாலரை மணி.
விக்ரம்
ஆதித்யாவின் ஏசி ரூம்.
லேசான
சென்ட் வாசம்.
மங்கலான
லைட்டிங்.
முன்னால்
மித்ரா. பாவமாக உட்கார்ந்திருந்தாள். கிராமத்துப் பைங்கிளி டைப்.
விக்ரம்
ஆதித்யா பக்கத்தில் நகர்ந்தார். "பாரும்மா மித்ரா! சினிமாவுல டேலண்ட் மட்டும்
பத்தாது. ஒரு கனெக்ட் வேணும். நான் சொல்றதைக் கேட்டா, நெக்ஸ்ட் வீக் பூஜையில நீதான்
ஹீரோயின். இல்லன்னா. பேக் அப் பண்ணிட்டு ஊருக்கு ஓட வேண்டியதுதான்."
சொல்லிவிட்டு
அவளது தோளைத் தொடக் கையை நீட்டினார்.
மித்ரா
பயந்து நடுங்குவாள் என்று எதிர்பார்த்தார்.
அவள்
அழவில்லை.
அமைதியாகத்
தன் ஹேண்ட்பேகைத் திறந்தாள்.
"என்னம்மா
சம்மதமா?"
அவள்
பையிலிருந்து ஒரு சின்ன மெட்டல் பொருளை எடுத்தாள்.
அது
கேமரா இல்லை. ரெக்கார்டரும் இல்லை.
அது
ஒரு லேசர் பாயிண்டர்.
அதை
ஆன் செய்து, விக்ரம் ஆதித்யாவின் நெஞ்சுக் கூட்டின் மையத்தில் சிவப்பாக ஒரு பொட்டு
வைத்தாள்.
விக்ரம்
ஆதித்யா பதறிப்போய் நான்கு அடியெடுத்துப் பின்வாங்கினார்.
நெஞ்சைத்
தொட்டுப் பார்த்தபடி, "ஏய் என்னடி இது? வெளியே ஸ்னைப்பரா? துப்பாக்கியோட யாராவது
நிக்குறாங்களா?" என்று வேர்த்துக்கொட்டக் கத்தினார்.
மித்ரா
உதட்டோரத்தில் லேசாகச் சிரித்தாள்.
"ஹாலிவுட்
படமெல்லாம் நிறையப் பார்ப்பீங்க போலிருக்கே சார்? நெஞ்சுல ரெட் டாட் விழுந்ததும் துப்பாக்கினு
நினைச்சு இவ்ளோ பயப்படுறீங்க! இது வெறும் நூறு ரூபாய் லேசர் லைட்தான். ஆனா உங்களைப்
மாதிரி அதிகார பலத்துல ஆடுறவங்களை ஒரே செகண்ட்ல நிலைகுலைய வைக்க இந்த உளவியல் பயம்
போதும்னு தெரியும். இது வெளிய நிக்குற என் டீமுக்கான சிக்னல்!"
"என்னடி
உளறுரே? டீமா?"
"ஆமா
சார்! ஜன்னல் வழியா வெளியே பாருங்க."
விக்ரம்
ஆதித்யா நடுங்கும் விரல்களால் திரைச்சீலையை விலக்கினார்.
வாசலில்
இரண்டு கறுப்பு நிற சுஸுகி கார்கள். உள்ளிருந்து நாலைந்து பேர் இறங்கினார்கள். கையில்
ட்ரைபாட், கேமரா. கழுத்தில் அடையாள அட்டைகள்.
இ.டி
மற்றும் ஐ.டி.
விக்ரம்
ஆதித்யாவிற்குத் தொண்டை வறண்டது. "ஏய் என்னடி கூத்து இது? ஐ.டி ரெய்டுக்கும் நீ
சொல்ற மேட்டருக்கும் என்ன சம்பந்தம்?"
மித்ரா
கூலாக எழுந்து தோள்பையை மாட்டியபடி நிமிர்ந்தாள்.
"டைரக்டர்
சார்! நீங்க என்னை நடிகைன்னு நினைச்சீங்க. ஆனா நான், நீங்க கடந்த அஞ்சு வருஷமா பிளாக்
மணியை ஒயிட் பண்ணப் பயன்படுத்திய மிராக்ஸ் என்டர்டெயின்மென்ட் ஷெல் கம்பெனியோட சீக்ரெட்
ஆடிட்டர்!"
"வாட்?!"
"நீங்க
நடிகைககிட்ட அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும்போது கதவை சாத்துவீங்க. ஆனா நான் உங்க லேப்டாப்
ஹேக்கிங் மூலமா, உங்க சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் வரைக்கும் பாஸ்வேர்ட்டை உடைச்சுட்டேன்!
பொண்ணுங்க பயப்படுவாங்கனு நினைச்சீங்க இல்ல. ஆனா கணக்கு வழக்குன்னு வந்துட்டா, இந்தியன்
பீனல் கோடை விட பயங்கரமானது எதுவுமில்லை சார்!"
டிங்
டாங்!
வாசல்
காலிங் பெல் உரக்க அடித்தது.
மித்ரா
கதவைத் திறந்தாள். திரும்பிப் பார்த்து நயன்தாரா ஸ்டைல் புன்னகை ஒன்றைச் சிதறடித்தாள்,
"MeToo ரொம்ப பழைய வெர்ஷன் சார்! இப்போதெல்லாம் வீட்டுக் கதவைத் தட்டுறது
EDtoo! ஆல் தி பெஸ்ட் சார்!"
*****

No comments:
Post a Comment