காற்றின் விலையும் கலோரியின் எடையும்
பிரபஞ்சத்தின்
ஆகச்சிறந்த ஏமாற்று வித்தை எது தெரியுமா?
எதுவுமே
இல்லாத ஒன்றை, எல்லாமே இருப்பது போல் காட்டுவது.
இதற்கு
மிகச்சிறந்த உதாரணம், கடைகளில் தொங்கும் லேஸ் பாக்கெட்டுகள்.
நீங்கள்
ஐந்து ரூபாயையோ, இருபது ரூபாயையோ கொடுத்து வாங்குவது உருளைக்கிழங்கு சிப்ஸை அல்ல, பிரத்யேகமாக
ஆலைகளில் அடைக்கப்பட்ட நைட்ரஜன் காற்றை!
பாக்கெட்டைப்
பார்த்தால் ஒரு தலையணை அளவுக்கு உப்பிக் கொண்டு கம்பீரமாக இருக்கும். ஆனால், அதன் எடையோ
பூவின் இதழை விட லேசாக இருக்கும்.
சரி,
எடையும் லேசாக இருக்கிறது, நாமும் லேசாக ஆகிவிடலாம், என்ற உன்னத தத்துவ நோக்கில் மனிதன்
அதை வாங்குகிறான்.
ஆனால்,
அங்கேதான் பிரபஞ்சம் தன் இருள் நகைச்சுவையை ஒளித்து வைத்திருக்கிறது.
பாக்கெட்டின்
எடை மிக லேஸ்தான். ஆனால், அதைத் தின்று முடித்த பிறகு உங்கள் தொப்பையில் ஏறும் கொழுப்பின்
எடை இருக்கிறதே. அது ஹெவி!
பாக்கெட்டைப்
பிரித்ததும் புஸ் என்று காற்று வெளியேறும். உள்ளே குனிந்து பார்த்தால், ஏதோ ஆழ்கடலில்
மூழ்கி முத்தெடுப்பது போல, அடியாளத்தில் நான்கு அல்லது ஐந்து சிப்ஸ் துண்டுகள் சோகமாகக்
காட்சியளிக்கும்.
இவ்வளவுதானா?
என்று நம் மூளை கேட்கும்போதே, கைகள் அந்தச் சிப்ஸை வாய்க்குள் தள்ளியிருக்கும். அந்த
நொடியில் நாக்கில் கரையும் உப்பு, காரம், மற்றும் கொழுப்பு ஆகியவை மனிதனை ஒரு தற்காலிக
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
சாப்பிட்டு
முடித்ததும் பாக்கெட் காலி. கையில் எடையும் இல்லை, பையிலும் எடையில்லை. ஆனால், அந்த
ஐந்து சிப்ஸ் துண்டுகளுக்குள் ஒளிந்திருந்த கலோரிகள் உடனே தங்கள் வேலையைக் காட்டத்
தொடங்கிவிடும். அவை நேராகச் சென்று உங்கள் இடுப்பிலும், தொப்பையிலும் தஞ்சம் புகுந்து
கொள்ளும்.
அதாகப்பட்டது,
பாக்கெட்டின் எடை 30 கிராம் அல்லது ஏறத்தாழ பூஜ்ஜியம்.
அதன்
தத்துவார்த்த விளைவு, உங்கள் எடையில் கூடுதலாக 2 கிலோ!
என்னவொரு
அற்புதமான அறிவியல் முரண்? லேசான பொருளைத் தின்னத் தின்ன மனிதன் கனமாகிக் கொண்டே போகிறான்.
உலகில்
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் டயட் இருக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால்,
அவர்கள் தோற்பது எங்கே தெரியுமா? இந்த லேசான பாக்கெட்டுகளின் முன்னால்தான்.
சாத்தான்
எப்போதுமே கனமான இரும்புக் குண்டுகளோடு வருவதில்லை. அவன் சில சமயம் காற்றில் மிதக்கும்
மஞ்சள் நிற லேஸ் பாக்கெட்டுகளின் வடிவிலும் வருவான். எதை நாம் வெயிட் இல்லாதது என்று
அலட்சியமாக நினைக்கிறோமோ, அதுதான் ஒருநாள் நம்மை வெயிட் மெஷின் மீது ஏறவிடாமல் பயமுறுத்தும்
வல்லமை கொண்டது.
எனவே
மக்களே, காசு கொடுத்து காற்றை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கும்
அந்த இரண்டு உருளைக்கிழங்குத் துண்டுகளையும் தின்றால், அப்புறம் நீங்கள் லேசாக நடப்பதற்குக்
கூட ஒரு ஆள் தேவைப்படும்!
*****

No comments:
Post a Comment