கதைக்கின்ற வாழ்வு!
எல்லாரும்
ஒரு
காலத்தில் போகத்தான் போகிறோம்
அதற்குள்
போனவர்களைப்
பற்றி
குய்யோ
முய்யோ அய்யோவென்று கதறி
ஒப்பாரி
வைத்து
போனது
பற்றி
போகிற
போக்கில்
பேசிப்
பேசி
ஒருவர்
ஒருவராய்
போகப்
போக
போக
இருப்பவர்கள்
போனவர்
பற்றி
எதையாவது
சொல்லிக்
புலம்பிக்
கொண்டிருக்க
போனவர்கள்
பற்றி
போகப்
போகிறவர்கள்
கதைப்பதன்றோ
வாழ்வு
*****

No comments:
Post a Comment