2 Jan 2026

கார்ப்பரேட் ஆசிகள்

வேறு வேறு

பூக்களுக்கும்

புளி மூட்டைகளுக்கும்

வேறு வேறு ஆட்டோக்கள்

வேறு வேறு வேன்கள்

குழந்தைகளுக்கும்

புளி மூட்டைகளுக்கும்

ஒரே விதமான ஆட்டோக்கள்

ஒரே விதமான வேன்கள்

*****

கார்ப்பரேட் ஆசிகள்

அடுத்த முறையும்

ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று

அருளாசி கேட்டார் தலைவர்

ஒழுங்காகப் பட்டுவாடா செய்தால்

அடுத்த முறையென்ன

ஏழேழு ஜென்மத்துக்கும்

நீயே ஆட்சியைப் பிடிப்பாய் என

நடுமண்டையில் தேங்காய் உடைத்து

ஆசி வழங்கினார்

கார்ப்பரேட் சாமியார்

*****

No comments:

Post a Comment