3 Jan 2026

நாய் அணங்குறுத்தல்

நாய் அணங்குறுத்தல்

ஓரத்தில் ஒண்ணுக்கடிக்க

விரும்பும் நேரத்தில் புணர

புதியவர் எவரேனும் கண்டால்

தெருமுனை வரை குரைத்துக் கொண்டே

துரத்திச் செல்ல

ஊர் மேய்ந்து தெருவெல்லாம் சுற்றி வர

ஆசை இருக்கத்தான் செய்யும்

என்ன செய்யுமோ

காவலர் கையில் சங்கிலி சகிதம்

நடைபயிற்சி செய்யும் நாய்களும்

நடைபயிற்சி செல்வோர் கையில்

காவல்காரர்களாய் வரும் நாய்களும்

*****

அப்புக்குட்டியின் கேள்வி

கலர் கலர் கோழிக்குஞ்சுகள்

வளர வளர வெளுத்த போது

வானவில் கலைந்தது போலாகி விட்டது

அடுத்த முறை அப்புக்குட்டி

கோழிக்குஞ்சுகளைப் பார்த்த போது

அப்பாவிடம் கேட்டான்

“கலர் கோழிகள் இருக்காதாப்பா?”

*****

No comments:

Post a Comment