அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்
ஏதோ
ஒன்றைத் தேட
தேடுவது
கிடைக்கவில்லை
என்பதைத்
தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை
இவ்வளவுதான்
இப்படித்தான்
என்று
எந்த முடிவையும் செய்து கொள்ள வேண்டியதில்லை
ஒவ்வொன்றும்
மாறிக் கொண்டிருக்கிறது
முன்பு
கருதிக் கொண்டிருந்த முடிவும்
இப்போது
மாறிக் கொண்டிருக்கிறது
முடிவுகள்
அனுபவங்களால் கிடைத்தவை
அனுபவங்கள்
ஒவ்வொன்றும்
தவறான
முடிவுகளால் உண்டானவை
சரியோ
தவறோ
புதுப்பித்துக்
கொண்டே
போய்க்
கொண்டே இருப்பதைத் தவிர
வேறு
என்ன வழியிருக்கிறது
புதுப்பித்தல்களைப்
புரிந்து கொள்ள முடியாமல்
குழம்பிப்
போகலாம்
எப்படியெல்லாம்
புதுப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை
ஒவ்வொருவருக்கும்
விளக்கிக் கொண்டிருக்க முடியாது
நீங்கள்
புதுப்பித்துக் கொள்ளப்பட்டிருப்பதை
நீங்கள்
புரிந்து கொள்ளவே நாட்கள் பல ஆகும்
*****
No comments:
Post a Comment