மாநகரக் குறிப்புகள்
இந்த
மாநகரின் மழைக்காலத்தில்
காய்ச்சல்
வந்தால்
மருத்துவரிடம்
ஓர் ஊசி
அத்துடன்
தற்காப்பிற்காக
ஒரு
கோப்பை கபசுர குடிநீர்
இனி
நிம்மதியாகத் தூங்கலாம்
*****
நகரங்களுக்குச்
சென்ற பிறகுதான்
புரிந்து
கொண்டேன்
மேம்பாலம்
இல்லை என்றால்
அது
நகரம் இல்லை
நான்கைந்து
மேம்பாலங்கள் இல்லை என்றால்
அது
மாநகரம் இல்லை
*****
மாற்றங்களை
எதிர்த்தால்
சிக்கன்
பிரியாணியோடு
நின்று
கொள்ள வேண்டியதுதான்
ஷவர்மா
கிடைக்காது
சாவும்
கிடைக்காது
*****
என்னுடன்
பேச யாருமில்லையா
ஏன்
நான் இல்லையா
நான்
எனக்கு நானேதான் பேசிக் கொள்கிறேன்
*****
No comments:
Post a Comment