நோயாளியின் வாக்குமூலம்
நான்
நோயாளியாகத்தான் இருந்தேன்
மருந்துகளைத்
தின்று தின்று
மருத்துவர்களைப்
பார்த்து பார்த்து
இன்று
நான் ஒரு மருத்துவராய் நிமிர்ந்து நிற்கிறேன்
அலோபதி
சரியா
ஓமியோபதி
சரியா
சித்த
மருத்துவம் சரியா
ஆயுர்வேதம்
சரியா
இயற்கை
மருத்துவம் சரியா
எது
சரி என்பது எனக்கு முக்கியமில்லை
எது
தவறு என்பதும் எனக்கு முக்கியமில்லை
எந்த
நோய்க்கு எந்த மருத்துவம் சரி என்பது
எனக்குத்
தெரியும்
ஏனென்றால்
நான் நோயாளியாக இருந்தேன்
இப்போதும்
இருக்கிறேன்
ஒவ்வொரு
நோய்க்கும் எந்த மருத்துவம் சரியாக வரும்
என்பதைத்
தெரிந்து கொள்வதற்காகவே
எப்போதும்
நோயாளியாக இருப்பேன்
ஒவ்வொரு
மருத்துவத்தின் சோதனை எலியாக
சந்தோசமாக
நான் இருப்பேன்
*****
No comments:
Post a Comment