காலம் எவ்வளவு மாறி விட்டது?
முன்பெல்லாம்
பெண் பார்ப்பதற்கு, மாப்பிள்ளை பார்ப்பதற்கு போட்டோகிராபர்கள் போட்டு எடுத்துக் கொடுத்தார்கள்.
பின்பு அதை போட்டோஷாப் பார்த்துக் கொண்டது. தற்போதை அதை AI பார்த்துக் கொள்கிறது.
*****
இதற்கு மேல் டிரம்ப் வரியைப் போட
வேண்டுமென்றால் எங்கே போடுவார்?
வரிகுதிரை
மேல் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.
*****
இயக்குநர் பாலாவிடம் சொல்ல வேண்டிய
செய்தி என்ன தெரியுமா?
நந்தாவாகி,
பிதாமகனாகி, நான் கடவுளாகி, அவன் இவனாகி, பரதேசியாகி, வணங்கானாகி பாவம் சார் அந்த சேது!
அவரை விட்டுடுங்க ப்ளீஸ்.
*****
கமல் பயோபிக்கில் கமல் நடித்தால்
எப்படி இருக்கும்?
களத்தூர்
கண்ணம்மா டிராயர் கமலிலிருந்து, வாணி கணபதி, சரிகா, கௌதமி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன்,
அரசியல்வாதியாகி டிவியை உடைக்கும் கமல் வரை அனைத்தையும் அவரே வேடம் ஏற்று நடித்து விடுவார்.
டைட்டில் கார்டில் எல்லா பாத்திரங்களுக்கும் கமல், கமல், கமல்,… என்று போட்டு இது தசாவதாரம்
அல்ல, அதையும் தாண்டிய பயோ அவதாரம் என்று போட வேண்டியிருக்கும்.
*****
தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதியம் திட்டம் பற்றி என்ன சொல்வது?
பழைய
ஓய்வூதியத் திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அதே நேரத்தில் புதிதாக எதையும் அறிவிக்கலாமலும்
இருக்க முடியாது. அதாவது, ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்,
இதெல்லாம் தொழில் நேக்கும்மா என்கிற சொல்கிற மாதிரி ஒரு திட்டம்தான் அது.
*****

No comments:
Post a Comment