இப்போதெல்லாம் விசாரணை என்றதும்
உங்களுக்கு மனதில் முதலில் தோன்றுவது என்ன?
உண்மை
வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லை.
*****
தேர்தல் அரசியல் என்பது என்ன?
காந்தியும்
கோட்ஸேயும் கூட்டணி வைத்துக் கொள்வதுதான்.
*****
மனைவியதிகாரம் என்பது என்ன தெரியுமா?
நேற்று
ஒரு கல் உப்பு கூடுதலாக என்று சொன்னதற்கு, இன்று நான்கு கல் தூக்கலாகப் போடுவதுதான்.
*****
தங்கத்தின் சிறப்பு என்ன தெரியுமா?
ரூபாய்
நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்க முடியும். தங்கத்தை அப்படி முடியாது.
*****
ச்சும்மா ஓட்டைப் பிரித்து மேய
ஒரு வாக்குறுதி…?
மகளிருக்கு
மாதந்தோறும் ஒரு கிராம் தங்கம்.
*****
வாக்கிங் போகிறவர்களின் எண்ணிக்கை
பிரத்யேகமாகச் சமீப காலங்களில் அதிகரிக்க என்ன காரணம்?
மக்கள்
வாக்கிங் போகும் இடங்களாகப் பார்த்து சுவையான பஜ்ஜி, போண்டா, சமோசா கடைகள் அமைவதுதான்.
*****
இந்தியர்களின் எந்த நம்பிக்கை உலகை
அசரடிக்கிறது?
கொன்றால்
பாவம் தின்றால் போய் விடும் என்பது போல, புண்ணியம் செய்தால் செய்த பாவம் பறந்தோடி விடும்
என்ற நம்பிக்கைதான்.
*****
இன்றைய இந்தியனுக்கு என்னதான் பிரச்சனை?
அது
இயக்குநர் ஷங்கரைக் கேட்க வேண்டிய கேள்வி சார்!
*****
ஸ்விஸ் பேங்க் எங்கே இருக்கிறது?
நாடாளுமன்ற
தேர்தல் வருவதற்கு முன்பு எங்கிருந்ததோ, அங்கேதான் இப்போதும் இருக்கிறது.
*****
எந்தப் போரையும் அடாவடியாகப் புகுந்து
நிறுத்த நினைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் நிறுத்த முடியாத போர் எது தெரியுமா?
அவர்
செய்யும் அக்கப்போர். அதை அவர் நினைத்தாலும் நிறுத்த முடியாது.
*****

No comments:
Post a Comment