15 Mar 2026

அட்ராசிட்டி & பேஷன்

அட்ராசிட்டி & பேஷன்

இன்றைய அரசியல் எப்படி இருக்கிறது?

ஒரு கையில் கத்தியையும் மறுகையில் துப்பாக்கியையும் (கத்தி, துப்பாக்கி என்றதும் ஒரு கட்சித் தலைவர் நடித்த திரைப்படங்கள் நினைவுக்கு வருவதற்குக் கம்பெனி பொறுப்பாகாது) கொடுத்து எதிரியென ஒருவரைச் சித்தரித்து விடுவதாக இருக்கிறது.

*****

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்பதைப் போல ஒரு வரி?

500 ரூபாய் நோட்டு கொடுக்கத் தெரிந்து ATM இயந்திரமே உனக்கு 100 ரூபாய் நோட்டு கொடுக்கத் தெரியாதா?

*****

வசதியும் வாய்ப்பும் வந்த பிறகு அதை அனுபவிக்க முடியவில்லையே என்று புலம்புவதற்கு ஒரு உவமை சொல்ல முடியுமா?

எல்லா ஒ.டி.டிக்கும் சப்ஸ்கிரைப் செய்து விட்டு ஒரு ஒ.டி.டியிலும் எதையும் பார்க்க நேரமில்லையே எனப் புலம்புவதைப் போல.

*****

வரி அட்ராசிட்டி, வட்டி அட்ராசிட்டி இரண்டுக்கும் உதாரணம்?

டெபாசிட் செய்யும் பணத்துக்கு 7 சதவீத வட்டித்தான் தருவார்கள். அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்தால் ஜிஎஸ்டி, செஸ் என்று 18 சதவீதம் வரை போட்டுத் தாக்குவார்கள். பெட்ரோல், டீசலுக்கெல்லாம் சதவீதத்துக்கே ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு 100 சதவீதம் வரைப் போட்டுத் தாக்குவார்கள். இதை வரி அட்ராசிட்டி என்று சொன்னால், வட்டி அட்ராசிட்டியும் அதைப் போலத்தான் இருக்கும். டெபாசிட் பணத்திற்கு 7 சதவீத வட்டி தருவார்கள். அதே பணத்தைக் கடனாக வாங்கினால் 18 சதவீதம் வரை வட்டி போடுவார்கள். அதுவே கிரெடிட் கார்டு என்றால் அதையே டபுளாக்கி 36 சதவீதம் வரை போவார்கள். மொத்தத்தில் இரண்டு அட்ராசிட்டிகளும் ஒன்றைப் போலவே, ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை.

*****

கிழிந்த பேண்டை என்ன செய்வது?

சாதாரண பேண்ட் என்றால் கால்சட்டையாக்கி அது கிழியும் வரை போட்டுக் கொள்ளலாம். ஜீன்ஸ் பேண்ட் என்றால் அதை எதுவும் செய்யாமல் பேஷன் என்று போட்டுக் கொள்ளலாம்.

*****

No comments:

Post a Comment