14 Mar 2026

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இந்தியா!

டிரம்ப் என்ன அடி அடித்தாலும் அதைத் தாங்கும் இந்தியாவை நினைக்கும் போது உங்கள் மைண்ட் வாய்ஸில் என்ன தோன்றுகிறது?

“எவ்வளவு அடித்தாலும் இவன் தாங்குறான்டா. இவன் ரொம்ப நல்லவன்.” என்ற வடிவேலுவின் மைண்ட் வாய்ஸ்தானே!

*****

தொடர்ந்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து இந்தியாவுக்குப் பயமில்லையா?

ஜிஎஸ்டியும் டோல்கேட்டும் இருக்க இந்தியாவுக்குப் பயமேன்?

*****

தற்போதைக்குத் தங்கம் விலை உயர்வதை எப்படிச் சமாளிப்பது?

தற்போதைக்குத் தங்கத்தை வாங்காமல் இருந்துதான் சமாளிக்க வேண்டும்.

*****

இனி எப்படி போராட்டம் நடத்தினால் அரசாங்கங்கள் கண்டு கொள்ளும்?

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இலவசங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றுதான்.

*****

வாகனத்தில் செல்லும் போது செல்போனைப் பயன்படுத்தலாமா?

இதெல்லாம் இந்தக் காலத்தில் செல்லுபடியாகாது. பெட்ரோல் பங்குகளில் செல்போனைப் பயன்படுத்தாதீர்கள் என்று எழுதியிருப்பார்கள். பெட்ரோல் பங்குகளின் பல பேமேண்டுகள் கூகுள்பே, போன்பேயில்தான் நடக்கின்றன. அதைப் போலத்தான் வாகனத்தில் செல்லும் போது செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பதும். கூகுள் மேப்பைப் பார்த்துதான் இங்கு பல வாகனங்களே ஓடிக் கொண்டிருக்கின்றன.

*****

No comments:

Post a Comment