இரவின் நிறம்
வெளிச்சம்
வேண்டுமெனக் கதறிய போது
இருள்
வந்தது
இருளுக்குப்
பழகிய பின்பு
வலிகள்
வந்தன
வலிகளை
ஏற்றுக் கொண்ட
ஒரு
நாளில் சிரிப்பு பிறந்தது
இத்தனை
நாளாய்
இந்தச்
சிரிப்பே
நீ எங்கிருந்தாய்
என்ற போது
வெளிச்சத்தைத்
தேடி
இருளைத்
தொலைத்த ஒவ்வொரு பொழுதிலும்
உன்
நிழல் போல இருந்தேன் என்றது
அந்தச்
சிரிப்பு
நிழலா
என்ற போது
உன்
மீது பட்ட
வெளிச்சத்தின்
இரவு
என்றது
சிரிப்பு
*****

No comments:
Post a Comment