அம்மா என்பதும் மனைவி என்பதும் ஆன்லைன்!
“சோறு
வடிக்கத் தெரியுமா?
இட்டிலி
சுட தெரியுமா?
தோசை
வார்க்க தெரியுமா?
சட்டினி
துவையல் பண்ணத் தெரியுமா?
சப்பாத்தி
இடியாப்பம் பண்ணத் தெரியுமா?
ரசம்
வைக்க தெரியுமா?
குழம்பு
வைக்க தெரியுமா?
கூட்டு
கறி பொரியலை விடு?
அப்பளம்
பொரிக்க தெரியுமா?
பிரியாணி
குருமா வைக்கத் தெரியுமா?
சிக்கன்
கிரேவி மட்டன் சுக்கா பண்ணத் தெரியுமா?
நான்
இல்லாம எப்படிச் சமாளிப்பே?”
“அட
போவீயா நீ!
எல்லாதையும்
ஆன்லைனில் ஆர்டர் பண்ணி
வாங்கிச்
சாப்பிட்டுக்குவேன்!”
*****
No comments:
Post a Comment