21 Sept 2018

குய(ழ)ந்தைப் போல அழுதவன்

குய(ழ)ந்தைப் போல அழுதவன்
நான் சொன்னதற்கு
நீதான் நம்ப மாட்டேன் என்றாய்
நாம் அப்படியல்ல என்றாய்
இப்போது போல
எப்போதும் மாறாதிருப்போம் என்றாய்
அதுதான் மனுசத் தனம் என்று
கண்ணீர் விட்டு அழுதாய் குய(ழ)ந்தைப் போல
தேவையா அதெல்லாம்?
பார்க்கும் போதெல்லாம்
முகத்தைச் சுருக்கி
எங்கோ தூக்கி வைத்துக் கொள்கிறாய்
எதுவும் பேசாமல் இருந்திருக்கலாமோ
என நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பது
எனக்குத் தெரியும்
என்ன செய்ய
நாமெல்லாம்  கொள்கைவாதிகள்
காசு கிடைத்தால் தூக்கி எறியும் வரை
*****

20 Sept 2018

காவியத் தலைவிக் காப்பியம்


தமிழில் தோன்றிய முதல் காப்பியமே காவியத் தலைவிக் காப்பியம்தான், அதாவது ஹீரோயின் சப்ஜெக்ட்தான் - சிலப்பதிகாரம்.
இரண்டாவது காப்பியமும் காவியத் தலைவிக் காப்பியம்தான், அதாவது ஹீரோயின் சப்ஜெக்ட்தான் - மணிமேகலை.
*****
ஏன் விரிவும் விளக்கமும் இப்போதெல்லாம் தோன்றுவதில்லை என்று யோசித்து இருக்கிறீர்களா? எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்று நினைத்தால் அதெல்லாம் தோன்றாது. யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைத்தால்தான் அதுவெல்லாம் தோன்றும்.
*****
நமக்குதான் பேப்பர் ரோஸ்ட். கழுதைக்கு பேப்பரே ரோஸ்ட்.
*****
பிரிவு என்பதும் இணைவு என்பதும் காதலுக்கும் உண்டு, கட்சிக்கும் உண்டு.
*****
ஒரு கதை சொல்லட்டுமா சார் என்றவரிடம், வாட்ஸ் அப்பில் அனுப்பிடுங்க என்று எஸ் ஆகிட்டேன். நாட்டில் விக்ரம் வேதாக்கள் அதிகம்.
*****

எல்லாம் ஒரு விளம்பரம்!


எல்லாம் ஒரு விளம்பரம்!
எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத்தான் என்று
ப்ளக்ஸ் வைப்பவர்கள் நீங்கள்
ப்ளக்ஸ் விழுந்து யாரேனும் இறந்தாலும்
கவலை கொள்ள மாட்டீர்கள்
அதுவும் ஒரு விளம்பரந்தான் என்பதை
அறிந்தவர்கள் நீங்கள்
*****
பெயர்கள்
உன் மேல் இருக்கிறதா
உன்னைப் படைத்தவளின் பெயர்?
நீ வாங்கிக் கொடுத்தவைகளின் மெலெங்கும்
உன் பெயர்!
*****

19 Sept 2018

முதல் டிவிட்டர்


வள்ளுவர் முதல் டிவிட்டர் என்பேன். அவ்வையாரை இரண்டாவது டிவிட்டர் என்பேன்.
*****
இமைக்கா நொடிகள் என்பது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்பேன். நீங்கள் திரைப்படம் என்பீர்கள். இரண்டும் சரிதான்.
*****
அணை உடைவதற்குக் காரணம் சுரண்டல். சுண்டல் அல்ல சுரண்டல். மற்றும் இது வெறும் மணல் சுரண்டல் எனும் கிண்டல் மட்டும் அல்ல இரட்டுற மொழிதல் எனும் சிலேடையும் கூட.
*****
இரவில் கொள்ளையடிக்கக் களவும், பகலில் கொள்ளையடிக்க அரசியலும் கற்றுக் கொள்ள வேண்டும்.
*****
ரெய்டு வரும் போது சரியாக மாரடைப்பும் வருகிறது. ச்சீ... ச்சீ... என்ன இதயமோ?
*****

காலியாய் இருக்கிறது குப்பைத் தொட்டி

காலியாய் இருக்கிறது குப்பைத் தொட்டி
ரகசியங்களின் விளைநிலம் மனம்
மனத்தின் வன்மத்தை
அவ்வளவு லேசாகக் கருதிக்
கடந்து போய் விடுவாயா நீ?
அதுவாக முளைத்தால் வெளியே தெரியும்
புதையுண்டால் அவ்வளவுதான்
புதையுண்டதெல்லாம் முளைக்காது என்று
வியாக்யானம் பேசாதே
சிலதுக்கு விதை உறங்கும் காலம் அதிகம்
என்ற கணக்கெடுத்துப் பார்
போடா போ
குப்பைத் தொட்டிக் காலியாய் இருக்கிறது
கொட்டி விட்டு வா மனத்தை!
*****

18 Sept 2018

மனைவின் முன் மனதின் குரல்


ஏன் டென்ஷன் ஆகுறீங்க?
என்னை அது கூட ஆக விட மாட்டியா? - மனைவின் முன் மனதின் குரல்.
*****
வெள்ளம் வரும் முன்னே அணை போடு என்பது அந்தக் காலத்து தமிநாட்டுப் பழமொழி.
வெள்ளம் உடைத்த பின்னே அணை போடு என்பது இந்தக் காலத்து தமிழ்நாட்டுப் புதுமொழி.
*****
நீங்கலாம் எப்படி பாஸ் சுதந்திரமாக இருக்கீங்க?
அதுக்கெல்லாம் படிக்கிற காலத்துலேயே அடங்காத கேஸ்ன்னு பட்டம் வாங்கியிருக்கணும்லா!
*****
நீ நீயாக இருக்க முடியாத இடத்தில் நீ இருக்காதே!
*****
ஏன் இரண்டாயிரம் நோட்டை அச்சடித்தார்கள்?
தேர்தலில் கொடுப்பதற்காக... - எங்கேயோ கேட்டது.
*****

காலம் காலமாக அப்படித்தான்...

காலம் காலமாக அப்படித்தான்...
வன்மம் என்றால்
ஒன்றுக்கு இரண்டாகச் செய்வார்கள்
நல்லது என்றால்
பாதி தேறுவது கடினம்
மாட்டி விடுவது என்றால்
ஒன்றுக்குப் பத்தாக நிகழ்த்திக் காட்டுவார்கள்
சகாயம் என்றால்
சட்டென இடத்தைக் காலி செய்து கம்பி நீட்டுவார்கள்
குறை சொல்வது என்றால்
கும்மியடிப்பார்கள்
ஒரு சொல் நற்சொல் என்றால்
கஞ்சத்தனம் படுவார்கள்
ஏன் இப்படியென்று யோசித்து குமையாதீர்கள்
மனிதர்கள் அப்படித்தான்
மிகு ஒழுக்கமாகப் பேசுபவனின்
கைபேசியில்
ஓர் ஆபாசப் படம் இல்லாமல் இருந்தால் நல்லது!
*****