19 Sept 2018

முதல் டிவிட்டர்


வள்ளுவர் முதல் டிவிட்டர் என்பேன். அவ்வையாரை இரண்டாவது டிவிட்டர் என்பேன்.
*****
இமைக்கா நொடிகள் என்பது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்பேன். நீங்கள் திரைப்படம் என்பீர்கள். இரண்டும் சரிதான்.
*****
ணை உடைவதற்குக் காரணம் சுரண்டல். சுண்டல் அல்ல சுரண்டல். மற்றும் இது வெறும் மணல் சுரண்டல் எனும் கிண்டல் மட்டும் அல்ல இரட்டுற மொழிதல் எனும் சிலேடையும் கூட.
*****
இரவில் கொள்ளையடிக்கக் களவும், பகலில் கொள்ளையடிக்க அரசியலும் கற்றுக் கொள்ள வேண்டும்.
*****
ரெய்டு வரும் போது சரியாக மாரடைப்பும் வருகிறது. ச்சீ... ச்சீ... என்ன இதயமோ?
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...