10 பிள்ளைகளும் 11 தோசைகளும்
பஞ்ச காலத்திலும்
பத்துப் பிள்ளைகளைப் பெற்ற
தாய்
பதினொரு தோசைகள் சுடுவாள்
பத்துத் தோசைகளைப் பிள்ளைகளுக்கும்
பதினோராவது தோசையை புருசருக்கும்
கொடுத்துவிட்டு
பனிரெண்டவதாகத் தானொருத்தியாக
தன்னந்தனியாகப் பசியைப் புசித்துக்
கொள்வாள்
*****
No comments:
Post a Comment