தேர்தலின் போது ஓட்டுக்குப் பணம்
வாங்குவதை எப்படி நியாயப்படுத்தலாம்?
இதென்ன
கேள்வி என்கிறீர்களா? எல்லாம் மைண்ட் வாய்ஸ் படுத்தும் டார்ச்சர்தான்.
காசு
வாங்காமல், தட் மீன்ஸ் லஞ்சம் வாங்காமல் எந்த வேலையைப் பார்த்துக் கொடுத்தாங்க? அதனால்,
காசு வாங்கிட்டுதான் அவங்களுக்கு ஓட்டையே போடணும்.
*****
ஊழல் புகாரில் சிக்கியவர்கள் திடீரென
ஆளுங்கட்சிக்குச் சென்றதும் புனிதமாகி விடுகிறார்களே. அது எப்படி?
அது
என்னவோ தெரியல, என்ன மாயமோ தெரியல ஆளுங்கட்சிக்குப் போனதும் ஒண்ணும் ஆவறது இல்ல… அபிராமி
அபிராமி மொமன்ட்தான். அது இருக்கட்டும் ஒரு பக்கம். அது என்ன வாஷிங் மெஷின் டெக்னாலஜியோ?
ஆளுங்கட்சிக்குப் போனால், ஊழல் கறை வெளுத்து விடுகிறது. அந்த அதிகாரம் என்ற வாஷிங்
பவுடரைப் போட்டு, ஊழல் கறை சட்டையை உள்ளே போட்டால், ட்ரையர் முடிந்து வெளியே வரும்போது
அது வெள்ளை குர்தாவாக மாறிவிடுகிறது. கறை நல்லது என்பது இதுதானோ என்னவோ! மொத்தத்தில்
இது மனிதர்கள் உணர்ந்து கொள்ள ஊழல் கறை அல்ல, அதையும் தாண்டி புனிதமானது. மீண்டும்
அது ஒரு பக்கமாய் இருக்கட்டும் என்று ஒதுக்கி வைத்த அபிராமி அபிராமி மொமன்ட்தான்.
*****
தன் கட்சிக்காரர்களே ஊழல் செய்து
மாட்டிக் கொள்ளும் போது, அதை கட்சியின் தலைவர் எப்படிச் சொல்லிச் சமாளிக்கலாம்?
கமல்
பாணியைக் கையில் எடுத்தால் ஊழல் என்ன, உலகக் கலவரத்தையே ஒரு நொடியில் சமாளிக்கலாம்.
அதாகப்பட்டது, ஊழல் இல்லைன்னு சொல்லல, ஊழல் இல்லாம இருந்தா நல்லா இருக்கும்ன்னுதான்
சொல்றேன் என்று சொல்லி சூப்பராகச் சமாளிக்கலாம்.
*****
செவ்வாய் கிரகத்துக்குப் போனாலும்
ஊழல் இருக்குமா?
அங்கு
மட்டும் ஏலியன்களா ஆட்சி செய்யப் போகின்றன? இங்கிருந்து போகும் மனிதர்கள்தானே ஆட்சி
செய்வார்கள். செவ்வாயையும் தாண்டி வியாழனுக்கே போனாலும் ஊழல் இருக்கும்.
*****
டிரம்பின் வரிகளிலிருந்துதப்பிப்பது
எப்படி?
அதுக்குச்
சாத்தியமே இல்லை. செவ்வாய் கிரகத்துக்கே போனாலும் அங்கிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு
ஆயிரம் சதவீதம் வரை கூட வரி விதிப்பார். டிரம்ப் இருக்கும் வரை வரி இருக்கும். வரி
இருக்கும் வரை டிரம்பும் இருப்பார்.
*****

No comments:
Post a Comment