கோடையில் வெயில் அதிகம்
வெயில் அதிகமா இருக்குல்ல
மே மாதம் அப்படித்தான் இருக்கும்
ஒரு மழை பெய்தால் நல்லா இருக்குமில்ல
நவம்பரில் பெய்த மழையை
ஏன் வேண்டாமென்று சொன்னாய்
இப்படியே போனா புழுக்கம்
தாங்காதுங்க
உன்னை யார் தாங்க சொன்னார்கள்
என்னோட உடம்பை நான்தானுங்களே
பாத்துக்கணும்
பாத்துக் கொண்ட உடம்பிலா
சுகர் என்கிறாய்
என்ன பண்றதுங்க வந்தது வந்துட்டு
அது எப்படி அதுவாக வரும்
நம்மள தாண்டியும் சில விசயங்க
இருக்குங்க
வெயிலும் அப்படித்தான் போய்
வா
என்னங்க பொசுக்குன்னு இப்படிச்
சொல்லிட்டீங்க
கோயிலில் கூழ் ஊற்றுகிறார்கள்
குடித்து விட்டு வா
என்னங்க நீங்க ஒரு குவார்ட்டர்
போனா
உடம்பு ரொம்ப கூலாயிடும்ங்க
தலையைச் சொரிந்து கொண்டு
நிற்பதில்
மனிதர்களுக்கு எவ்வளவு ஆனந்தம்
மண்டையில் பேன்கள் பீடித்த
தலையர்கள்
போடா போ யாரையாவது ஏமாற்றி
நாலு காசு சம்பாதித்து மூச்சு
முட்டக் குடித்து
நடுரோட்டில் கிட வெயில் தெரியாது
*****
No comments:
Post a Comment