ஒன்றுமே தெரியாத புருஷன்
அலுவலகம் இருப்பதால்
காலை நேரம் பரபரப்பாகி விடுகிறது
அதிகாலை எழுந்து வாசல் பெருக்கி
அடுப்பு துடைத்து காபி போட்டு
வீட்டுப் பெண்ணவள் மிஷின்
போலாகி விடுகிறாள்
நான் சாவகாசமாக எழும் போது
எட்டு மணியாகி விடும்
அலுலகம் கிளம்பப் போவது நான்
என்றாலும்
பரபரப்பு மனைவிக்கு
பல் துலக்கி வயிற்றைப் பிதுக்கி
உடம்பை நீரில் நனைத்து துண்டில்
துடைத்து வருவதற்குள்
சுடச்சுட பலகாரங்கள்
டைனிங் டேபிளைச் சுட்டுக்
கொண்டிருக்கின்றன
நல்ல பெண் அவள்
எடுத்துத் தின்று பரபரப்பாகி
விடக் கூடாது என்பதற்காக
ஊட்டி விடுகிறாள்
சட்டை பித்தான்கள் போடுவதில்
டென்ஷன் ஆகி விடக் கூடாது
என்பதற்காக
போட்டு விட்டு பேருந்தில்
ஏற்றி விட்டுதான்
மறுவேலை பார்ப்பாள்
வேலை பார்த்தால் டென்ஷன்
ஆகி விடும் என்பதால்
பக்கத்து சீட்டு ராமாநாதன்
பார்த்துக் கொள்வார்
இடையிடையே மூன்று நான்கு
முறை
டென்ஷன் தணிக்க
அலைபேசியில் பேசி விடுவாள்
வீட்டிற்கு வந்தால் கால்
அமுக்கி விடுகிறாள்
டிவி பார்த்து ரெஸ்ட் எடுங்கள்
என்கிறாள்
பெரும்பாலும் கார்டூன் படங்கள்
போட்டு விடுவாள்
குமுதம் ஆனந்த விகடன் படித்தால்
பூரித்துப் போவாள்
ஒன்றுமே தெரியாது என் புருஷனுக்கு
என்பதில்
எவ்வளவு சந்தோஷம் கொள்கிறாள்
தெரியுமா
*****
No comments:
Post a Comment