ஓடிப் போனவனும் ஓடிப் போகாமல் படித்தவனும்
பத்துக் கேள்விக்குப் படிச்சிட்டேன்பா
மிஸ் ரொம்ப அடிப்பாங்களோ
எப்படிப்பா கண்டுபிடிச்சீங்க
நானும் வாத்தியார் அடிச்சதால
படிச்சவன்தான்
இப்போ உன் முன்னால ஆபிஸராயி
நிக்குறேன்
எதிர் வீட்டு முகேஷ் மிஸ்
அடிச்சா
ஸ்கூல் வர மாட்டாம்பா
எங்க செட்டு அழகேசன் வாத்தியாரு
அடிச்சதால
ஓடிப் போனவன்தான்
அழகேசன் அங்கிள் ஆபிஸராகலைலப்பா
பிள்ளையிடம் எப்படிச் சொல்வது
கான்ட்ராக்டர் ஆகி ஆபிஸர்களைக்
கஷ்டப்படுத்துகிறான் என்று
தயவு செய்து பிள்ளைகளை அடிக்காதீர்கள்
ஓடிப் போய் ஒண்ணு கெடக்க
ஒண்ணு ஆகி
ரொம்பவே படுத்தி எடுப்பார்கள்
சொல்லுங்கப்பா அழகேசன் அங்கிள்
ஆபிஸராகலைலப்பா
நல்ல வேளை ஆபிஸர் ஆகலையடப்பா
*****
No comments:
Post a Comment