சிரிப்புப் படம்
"பர்ஸ்ட்லேர்ந்து லாஸ்ட் வரை ஆடியன்ஸை
சிரிக்க வைக்குற மாதிரி ஒரு கதை சொல்லுங்க!" என்று தயாரிப்பாளர் சொன்னதும்,
"ஒரு பேய்ப்பட கதை இருக்கு சார்!" என்று ஆரம்பித்தார் டைரக்டர்.
*****
நிர்வாகம்
"நல்லாத்தானே பாடம் நடத்துவாங்க அபி
மிஸ்! அவங்கள எதுக்கு மேனேஜ்மென்ட்லேர்ந்து தூக்குனாங்க?"
"இந்த வருஷம் அவங்களால பத்து அட்மிஷன்
கூட கேன்வாஸ் பண்ண முடியலியாம்!"
*****
வேறு வழி
நேரமாகி விட்டது என்று வேக வேகமாக கிளம்பிய
ராஜா வேறு வழியின்றி டிராபிக் சிக்னலில் நின்று நின்று சென்று கொண்டிருந்தான்.
*****
இரு செய்திகள்
தமிழ்நாட்டில் டெங்கு இல்லை என்ற நேர்காணலுக்குப்
பிறகு, டெங்கு காய்ச்சலில் பலியான சிறுமியின் செய்தி ஒளிபரப்பாகிறது.
*****
No comments:
Post a Comment