உண்மைக்
கதை
"இது ஒரு
உண்மைக் கதை!" என்ற அறிவிப்பைத் தொடர்ந்து,
"ஒரு நிர்வாணக் காட்சி உண்டு" என்று
அறிவிப்பு வெளியான சில நொடிகளில் வைரலானது அந்தத் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு.
*****
அம்மான்னா
சும்மா இல்லடா!
அம்மா
இறந்த செய்தி கேட்டு விம்மி விம்மி அழுதான் விமல், "இனி
அவள் பெயருக்கு வரும் பென்ஷன் இல்லாமல் எப்படிச் செலவுகளைச் சமாளிப்பது?"
என்று புரியாமல்!
*****
உள்ளாடை
திருடியப்
பொருள்களை உள்ளாடைக்குள் மறைத்து வைக்க வேண்டும் என்ற சூட்சுமம் அறிந்ததும்,
அன்று முதல் அணிய ஆரம்பித்தான் உலகநாதன் உள்ளாடையை!
*****
No comments:
Post a Comment