நீயும் நானும்
உன்
ஈரக்கூந்தல் சிந்தும்
ஒற்றைத்
துளியில்
கடல்
தெறிக்கிறது!
உன்
உதடுகள் சிந்தும்
புன்னகையில்
முத்துகள்
தெறிக்கிறது!
மனக்கடலில்
மூழ்கி
முத்தெடுத்துக்
கொண்டு
இருக்கிறேன்
நான்!
பார்க்க
பார்க்க
மேலும்
மேலும்
சிந்திக்
கொண்டே போகிறாய்,
பொறுக்க
முடியாமல்
நின்று
கொண்டிருக்கிறேன்
நான்!
*****
இருக்கிறது
தடுக்கி
விழுந்தாலும்
தள்ளி
விட்டு இருந்தாலும்
கைதூக்கி
விடவோ
விடாமல்
போகவோ
எதற்கும்
வாய்ப்பு இருக்கிறது!
அதை
விட
எழ
வேண்டும்
என்ற
மனம்
எல்லோரிடமும்
இருக்கிறது!
அதைப்
புரிந்து கொள்வதற்கான
மனம்
மட்டும்
ஒரு
சிலரிடமே இருக்கிறது!
*****
No comments:
Post a Comment