28 Jan 2017

ஒலிக்குப்பை


ஒலிக்குப்பை
வெளியில்
கூட்டி விட்டு வைத்த
விளக்குமாற்றைத்
திருடிக் கொண்டு போய் விடுகிறார்கள்
தூய்மை பிடிக்காதவர்கள்!
குப்பையாய் இருக்கும்
தெருவை
ஒரு நாள் கூட்டி விட்டுப் போகிறார்கள்
தூய்மை குறித்த
விளம்பரப் பிரியர்கள்!
வாசலை
வைத்துக் கொண்டு
என்ன செய்வது என
யோசித்துக் கொண்டிருக்கையில்
குப்பை வண்டி
கடந்து செல்கிறது
பேரிரைச்சலோடு!
பேரொலியைக்
கொண்டு போய் போடும்
குப்பைத் தொட்டியை
காண இயலாது
ஒலித்துக் கொண்டே இருக்கின்றன
வீதியெங்கும் நிரம்பும்
இரைச்சல்கள்
வீடு முழுவதும்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...