குள்ளம்
குழந்தைகளை
அடித்த பின் குழந்தைகளை விட குள்ளமாகத் தெரிந்தார் ஆசிரியர்.
*****
போட்டி
பள்ளிச்
சிறுவர்களுக்கான கவிதைப் போட்டிக்கு, பள்ளி வயதில்
தான் எழுதிய கவிதையைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார் நரைமுடிக் கவிஞர் நந்தகோபன்.
*****
எல்லை
தாண்டிய பயங்கரவாதம்
ஸ்ருதி
"இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்!" என்று
சத்திமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள், அவளுடைய பேஸ்புக்
டைம்லைனில் போஸ்ட் செய்த சரணிடம்.
*****
No comments:
Post a Comment