27 Jan 2017

சுருக்கமான அரசியல் வரலாறு


சுருக்கமான அரசியல் வரலாறு
            திராவிடத்தைத் தூக்கிப் பிடித்தது தி.க. வின் பெரியார். திராவிடத்தைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது தி.மு.க.வின் அண்ணா.
            அண்ணா தூக்கிப் பிடித்தது நாவலர் நெடுஞ்செழியனை. அண்ணாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தது கலைஞர் கருணாநிதி.
            அண்ணாவிடம் அரசியல் பாடம் பயின்ற கலைஞர்தான் இனி எல்லாம் என்று இருந்த நேரத்தில், அண்ணாவின் பெயரில் கட்சித் தொடங்கி ஆட்சியைப் பிடித்தது அ.தி.மு.க.வின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்..
            எம்.ஜி.ஆர்.க்குப் பின் இனி அவர் மனைவிதான் என்ற போது, அடுத்து ஆட்சியைப் பிடித்தது புரட்சித் தலைவி ஜெயலலிதா.
            யாருக்குப் பின் யார்? என்பதுதான் அரசியலில் சூக்குமமாகவே இருக்கிறது.
            இந்திய அரசியலை எடுத்துக் கொண்டால், தலைவர் வாஜ்பேயிக்குப் பிறகு அத்வானிதான் என்று நினைத்திருந்த வேளையில் மோடி வந்து விட்டார்.
            ராஜிவ் காந்திக்குப் பின் சோனியாதான் வருவார் என்றிருந்த நிலையில் நரசிம்மராவ், மன்மோகன் சிங் என்று வந்தார்கள்.
            அமெரிக்க அரசியலை எடுத்துக் கொண்டால், ஒபாமாவுக்குப் பிறகு ஹிலாரிதான் என்றிருந்த நிலையில் டிரம்ப் வந்து விட்டார்.
            அரசியல் செமையான கவர்ச்சிகரமான சூதாட்டம். அடுத்தது என்ன நடக்கும் என்பது சத்தியமாக அரசியலுக்கேக் கூட தெரியாது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...