21 Oct 2026

நிலவின் வரைபடம்

நிலவின் வரைபடம்

ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த

சந்திரனை ஒத்த

சாலை முழுக்க பள்ளங்கள்

கார் லாரி பஸ் ஆட்டோ

எல்லாம் தலைதெறிக்கக் குதிக்கின்றன

உள் உறுப்புகள் இடம் மாறிக்

கொள்கின்றன

ஒரு பழைய சைக்கிள் மட்டும்

 நிதானமாகச் செல்கிறது

பின்னால் கணவனின்

தோளில் சாய்ந்தபடி

கர்ப்பிணி மனைவி

அத்தனை ஆயாசத்திலும்

பூமியிலிருந்து பார்க்கும் நிலவைப் போல

அவ்வளவு புன்னகையுடனும்

தலைநிறைய மல்லிகை சரங்களுடனும்

*****

No comments:

Post a Comment