அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின்
பள்ளிகளில் பரவி வரும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் பற்றித் தமிழில் தழுவி படம் எடுக்கச்
சொன்னால் அதற்கு யாரைப் போடலாம்?
வேறு
யாரைப் போடலாம்? நம்ம ஏ.ஆர்.முருகதாஸ்ஸைத்தான். இதற்காக ஸ்பீல்பெர்க்கையோ, கிறிஸ்டோபர்
நோலனையோவா தேடிக் கொண்டிருக்க முடியும்? துப்பாக்கி எடுத்து அதை அப்படியே மதராசிக்கும்
தூக்கி வந்தவர் ஆயிற்றே ஏ.ஆர்.முருகதாஸ். ஸ்லீப்பர் செல், பள்ளிகளில் கள்ளத்துப்பாக்கி
விநியோகம், அதை தடுக்கும் அன்டர் கவர் விஜய் அல்லது சிவகார்த்திகேயன் அல்லது இருவரும்
என மும்பை வில்லன்களை இறக்குமதி செய்து சிறப்பான படத்தைத் தமிழ் திரையுலகுக்கு ஏற்றுமதி
செய்து விடுவார். வெண்ணெய்யைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?!
*****
உலக வெப்பமயமாதலை எப்படித் தடுக்கலாம்?
செல்லூரார்
பாணியில் சொன்னால் உலகைத் தூக்கி ஒரு பிரிட்ஜிக்குள் போட்டு விடலாம். அந்தப் பிரிட்ஜ்
செய்வதற்கான கான்ட்ராக்டையும் அவருக்கே கொடுத்து விடலாம். சோலி முடிந்தது.
*****
கிரிக்கெட்டில் இந்தியாவோடு விளையாட
மறுக்கும் அணிகளை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம்?
எந்த
நாடு விளையாட மறுக்கிறதோ, அந்த நாட்டின் மீது டிரம்பிடம் சொல்லி வரியைத் தூக்கிப் போடச்
சொன்னால் விசயம் முடிந்தது. டிரம்பின் வரி விளையாட்டுக்குக் கிரிக்கெட் விளையாட்டே
பரவாயில்லை என்று விளையாட வந்துவிடுவார்கள்.
*****
இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா
எண்ணெய்யில் லாபம் பார்ப்பது மட்டும்தானே டிரம்பின் கண்களுக்குத் தெரிகிறது. வேறு அவர்
கண்களுக்குத் தெரியாதது என்ன?
தமிழ்நாட்டின்
டாஸ்மாக் பற்றி அவருக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தால் டாஸ்மாக் அமெரிக்காவிடமிருந்துதான்
சரக்கு வாங்க வேண்டும் என்று ஆர்டரையே போட்டு விடுவார். இல்லையென்றால் தமிழ்நாட்டில்
விற்கும் ஒவ்வொரு பாட்டில் சரக்குக்கும் அமெரிக்காவுக்கும் சேர்த்து வரி விதிக்க வேண்டும்
என்று அடம் பிடிப்பார். ஈரானை நோக்கித் திருப்பியிருக்கும் போர்க்கப்பல்களைத் தமிழ்நாட்டை
நோக்கித் திருப்புமாறு ஆர்டரையே போட்டு விடுவார். இப்போதைக்குக் கீப் சீக்ரெட் அபௌட்
டாஸ்மாக் ரொம்ப அவசியம்.
*****
எலான் மஸ்க் பத்து லட்சம் சேட்டிலைட்டுகளை
ஏவி டேட்டா சென்டர் அமைக்கப் போகிறாராமே?
இதென்னடா
டெக்ஸாஸ்க்கு வந்த சோகம்! டிரம்புக்கு டாக்ஸ் என்றால் மஸ்க்குக்கு ஸ்பேஸ். இருந்தாலும்
இதெல்லாம் நம் ஷங்கரின் சிங்கிள் ஷாட் ஸ்கிரீன்ப்ளேவுக்குப் பக்கத்தில் கூட வர முடியாது.
பை த வே! கீப் இட் அப் மஸ்க். ஷங்கரை விஞ்ச பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
*****

No comments:
Post a Comment