எலான் மாஸ்க்குக்கு ஒரு யோசனை!
ஆயுள்
காப்பீட்டு நிறுவன (எல்ஐசி)
முகப்புத்
தளத்தில் இந்தி என்றார்கள்
ஏற்கனவே
ஆயுள் காப்பீடு என்றால்
ஒன்றும்
புரியாது
இதில்
இது வேறா என்று தலையில் அடித்துக் கொண்டேன்
கியா
பாத்து கே
இந்திக்காரன்
பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டு போகிறான்
*****
என்
முடிவு என் விருப்பம்
விளக்கங்களை
எதிர்பார்க்காதீர்கள்
எனக்கு
விளக்கம் சொல்ல வராது
பரீட்சையில்
கூட
ஒரு
மதிப்பெண் வினாக்களைத் தவிர
பிற
வினாக்களுக்கு விடை அளிக்க மாட்டேன்.
*****
எந்த
செய்தி உலகமெல்லாம் செல்ல வேண்டுமோ
அதை
உளறிக்
கொட்டினால்தான்
உறக்கம்
பிடிக்கும் உன்னிடம் சொல்கிறேன்!
அவதூறு
செய்வது உன் இயல்பு
நகைச்சுவையாக
எடுத்துக் கொள்வது என் இயல்பு
ஆகவே
கோபப்படாதே சகோ
*****
இந்த
மழைக்காலத்தில் மகிழ்வுந்து பெரிய பிரச்சனை
அடிக்கடி
மேம்பாலத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டியிருக்கிறது
மழை
வந்தால் இருபதடி உயரத்தில் தானாக மேலேறிக் கொள்ளும்
மகிழ்வுந்தைத்
தயாரிப்பதற்கு யோசனை சொல்லி
எலான்
மஸ்க்குக்கு ஒரு துண்டு செய்தி அனுப்பியிருக்கிறேன்
எவ்வளவோ
செய்த
எலான்
மஸ்க்
எனக்காக
உனக்காக
சென்னை
வந்தால்
தங்குவதற்காக
இதை
செய்ய மாட்டாரா?
*****
No comments:
Post a Comment