காதல் கொஞ்சம் ஆடம்பரம்!
Love Is Costly!
அப்போது
நடக்க முடியாது என்றாய்.
நான்
தூக்கிக் கொண்டு நடந்தேன்.
எவ்வளவு
அழகாக இருந்தன அந்த நாட்கள்.
இப்போது
தூக்கிக் கொண்டு நடக்க தெம்பில்லை என்றாலும்
மீண்டும்
வருமா அந்த நாட்கள்?
நடந்தோ
கடந்தோ செல்ல முடியுமா
பின்னோக்கிய
காலத்தின் தூரம்!
*****
உள்ளுணர்வு
தவறே செய்யாது
என்றால்
நான்
எப்படி காதலித்தேன்?
*****
கண்மூடித்தனமாக
விமர்சிப்பதாகச் சொல்கிறாயே
நன்றாகப்
பார்
கண்
திறந்த தனமாகத்தான் விமர்சிக்கிறேன்
நான்
என்ன உன்னுடன்
கண்ணாமூச்சியா
விளையாடுகிறேன்?
*****
காதலித்தோம்
பிரிந்தோம்
இப்போது
ஐஸ்கிரீம்
கிடைக்காமல்
உருகிப்
போகிறேன்!
******
இதற்குத்தான்
காதலிக்க
பிடிக்கவில்லை
ரொம்ப
செலவு
வைக்கிறது!
*****
No comments:
Post a Comment