21 Dec 2024

பிணங்கள் கரை ஒதுங்கி விடும்!

பிணங்கள் கரை ஒதுங்கி விடும்!

அங்கேயே நின்றால்

எப்படி நகர முடியும்

நகர்தல் இயல்பு

அதற்கு எதற்கு சூத்திரங்கள்

நீயென்ன இயந்திரமா

நகர்தல் உயிர்ப்பு

நகர்ந்து பார்

நகர்வது புரியும்

நத்தை பாட்டுக்கு நகர்வதைக் கவனி

நீயும் நகர்வாய்

*****

பிறவி என்பது கடல் என்றால்

பிணமானால் நீந்தாமலே

கடந்திடலாம்

அல்லது

கரை ஒதுங்கிடலாம்

*****

எதுவும் எதையும் தேடுவதுமில்லை

அடைவதுமில்லை

அது விழுகிறது

அது அங்கே இருக்கிறது

அப்படி மாறுகிறது

அர்த்தங்கள்

அவரவர் கற்பித்தவை

சில நேரங்களில் பிதற்றத் தோன்றுகிறது

அதற்கென்ன செய்வது

வேண்டுமானால் நீங்களும் பிதற்றிக் கொள்ளுங்கள்

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...