4 Dec 2023

உருளை காட்டும் அபாயச் சிவப்பு

புல் டாக் டைம்

பாசக் கயிற்றுடன்

எமன் நிற்கிறார்

அலைபேசியில் பேசுபவர்

பேசிக் கொண்டு இருக்கிறார்

புல் டாக் டைம்

28 நாட்கள் நீடிக்குமே என்று

பேரேட்டின் பக்கங்களைத்

திருப்ப முடியாமலும்

அலைபேசி பேச்சில்

ஒன்ற முடியாமலும்

வளைகிறார் நெளிகிறார்

கொட்டாவி விடுகிறார் சித்திரகுப்தன்

*****

உருளை காட்டும் அபாயச் சிவப்பு

காசு கொடுத்து யார் அடுப்பெரித்தார்கள்

கருவை

காட்டாமணக்கு

சுள்ளிகள்

சருகுகள்

மட்டைகள்

மரப்பட்டைகள்

பட்டுப்போன கிளைகள்

பன்னாடைகள்

பழைய டயர்கள்

எரியக்கூடிய அத்தனையும் விறாகாகி விடும்

தன்னை எரித்தும் விறகாக்கிக் கொள்ளலாம்

காசுக்கு விறகு வாங்குகிறவர்கள் ஆடம்பரக் குடும்பம்

ஆயிரம் ரூபாய் இருந்தால்

ஆறு மாதத்துக்கும் கும்மாளம்

அன்று போலவா இன்று

ஆயிரத்து இருநூறு இல்லையென்றால்

வீட்டிற்கு வந்து இறங்காது

அபாயச் சிவப்பைக் காட்டும்

எரிவாயு உருளை

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...