அன்பிற்கினிய கலவரக்காரர்களே
உங்களால் முடியுமானால்
உங்கள் வீட்டை நோக்கி கல்லெறியுங்கள்
உங்கள் வீட்டினுள் உள்ள பொருட்களைத்
தூக்கி
தெருவில் வீசுங்கள்
வீசியப் பொருட்களை ஒவ்வொன்றாய்
உடையுங்கள்
வீட்டிலிருப்போரை உள்ளே வைத்தோ
வெளியில் வரவழைத்தோ
கட்டைகளால் தாக்குங்கள்
சோடா பாட்டில்களை வீசித்
தாக்குங்கள்
நிறைவுக் காட்சியாக பெட்ரோல்
ஊற்றியோ
மண்ணெண்ணெய் ஊற்றியோ தீ வையுங்கள்
வெந்து தணியும் வீட்டை ரசியுங்கள்
இதில் யாதொன்றையும் செய்யாமல்
பொதுவிடங்களில் கல் வீசுவதையோ
பேருந்துகளுக்கு தீ வைப்பதையோ
கண்டோரைக் கட்டையால் தாக்குவதையோ
தயவு செய்து செய்யாதீர்கள்
ஒன்றைச் செய்வதற்கு முன்
உங்களைத் தகுதிப்படுத்திக்
கொள்ளுங்கள்
அன்பிற்கினிய கலவரக்காரர்களே
*****
No comments:
Post a Comment