10 Nov 2021

நிர்வாண உலகில் கைபேசிகள் இல்லை

நிர்வாண உலகில் கைபேசிகள் இல்லை

ஓயாது அலறும் கைபேசிகள்

புது புது கட்டளைகளைப் பிறப்பித்தபடி இருக்கின்றன

காற்றில் யாரோ சொல்லும் மொழிக்கு

இங்கிருந்தே கட்டுப்பட வேண்டியதாயிருக்கிறது

கைபேசியை அணைத்து வைப்பது திமிர் எனப்படுவதால்

அணையாத தீபமென ஏற்றி வைக்க வேண்டியிருக்கிறது

தவற விடும் கைபேசியால் எண்களைத் தொலைத்து விடுவது

அக்கறையின்மை என விமர்சிக்கப்படுவதால்

அங்காங்கே எண்களைப் பலவிதமாக சேமிக்க வேண்டியிருக்கிறது

ஏதேதோ எண்களிலிருந்து அழைப்புகள் வரும் போது

தவறான அழைப்பு என்பதை

கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல சொல்ல வேண்டியிருக்கிறது

சைகை இல்லாத இடங்களுக்குச் சென்று விடும் போது

பிறந்து அழாது இருக்கும் குழந்தையைப் போலாகி விடும்

கைபேசியைக் காண்கையில் பேசுவதன் அங்கலாய்ப்புகளைக் கடந்து

யார் யார் அழைத்திருப்பார்களோ என்று தவிக்க வேண்டியிருக்கிறது

மனதுக்குள் சிப்பைப் போல பொருந்தி

ஓர் எந்திரம் போல இயங்க வைக்கையில்

கைபேசி கையிலிருப்பவருக்கு வீடுபேறு என்பதில்லை

நிர்வாணம் அடைபவரின் கைகளில் கைபேசி இல்லை

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...