6 Oct 2021

அர்த்தம் இழந்தாக வேண்டிய நிறங்கள்

அர்த்தம் இழந்தாக வேண்டிய நிறங்கள்

இருட்டு சிவப்பாக இருக்கலாம்

பகல் பச்சையாக இருக்கலாம்

அந்திப் பொழுதில் நீலம் இருக்கலாம்

கருக்கலில் பழுப்பு இருக்கலாம்

நிறங்களை இஷ்டப்படி மாற்றிக் கொண்டே இருக்கலாம்

எந்த நிறம் எதற்கென்ற குழப்பம் வேண்டும்

ஒரே நிறமாய் இருப்பது அலுப்பு தருகிறது

கருப்பாய் இருப்பவர்கள் வெள்ளையாய் ஆகி விட வேண்டும்

வெள்ளையாய் இருப்பவர்கள் கருப்பாய் ஆகி விட வேண்டும்

பிறகு யாரை வெள்ளையர் கருப்பர் என்று அழைப்பது

எல்லாரும் நிறம் மாறிப் போகப் போகிறவர்கள்

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...