12 Oct 2021

ஓடும் மனதிடம் சொல்லுங்கள்

ஓடும் மனதிடம் சொல்லுங்கள்

விரைவு வேண்டாமென்று

என் மனதுக்கு யாராவது சொல்லுங்கள்

ஒரு காலத்தில் மிதிவண்டியின் வேகத்தில் ஓடி

தற்காலத்தில் புல்லட்டின் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது

காலப்போக்கில் அதன் வேகம் அதிகமாகலாம்

இரத்தமும் சதையும் எலும்புகளும்

ஈடு கொடுக்க முடியாத வேகத்தில்

மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது

உடல் நின்று விட்ட இடம் வெகு தொலைவில் இருக்கிறது

உடலும் மனமும் சந்திக்கும் புள்ளியை இழந்து விடும்

அந்நியப் புள்ளியில் தவிப்பதை அறிபவர்கள்

மனதிடம் சொல்லி

இப்போதாவது வேகத்தை நிறுத்த சொல்லுங்கள்

உடலைத் தேடி எடுத்து வர ஆகும் நெடுங்காலத்தில்

இதற்கு மேல் ஓடாமல் இருக்க

ஓடும் மனதிடம் யாராவது சொல்லுங்கள்

ஓடும் சக்கரத்துக்கு அச்சு முக்கியம் என்று

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...