25 Feb 2017

ஒரு மாலின் இரு காட்சிகள்


கை மாத்து
பை நிறைய ரெண்டாயிரம் நோட்டுகளை வைத்துக் கொண்டு நூறு ரூபாய் கை மாத்து கேட்ட மேனேஜரைப் பார்க்க பாவமாய் இருந்தது ப்யூன் காளிமுத்துவுக்கு.
*****
ஒரு மாலின் இரு காட்சிகள்
ஒரே மாலின் ஒரு தளத்தில் வெளிறிப் போய் வெளியேறிக் கொண்டிருந்தனர் காமெடிப் படத்திற்கு டிக்கெட் வாங்கி உள்ளே சென்றவர்கள், மறுதளத்தில் வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்தனர் பேய் படத்திற்கு டிக்கெட் வாங்கி உள்ளே சென்றவர்கள்.
*****
பாரி
செம்மரக் கடத்தல் வியாபாரி ஆகி இருந்தான் பாரி.
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...