25 Feb 2017

காத்திருப்பு


காத்திருப்பு
ஏதோ ஒரு நாளில்
எங்கோ ஒரு இதழில்
ஒரு கவிதை பிரசுரமாகும்
என்ற நம்பிக்கையில்
எழுதி எழுதி மாய்ந்துப் போகிறான்.
பிரசுரமாகும்
அந்த ஒரு கவிதைக்குக்
கிடைத்த அதிர்ஷ்டம்
மற்ற கவிதைகளைக்
கூனி குறுகச் செய்கிறது.
அதிர்ஷ்டம் இல்லாமல்
தங்களைப் பெற்றெடுத்த கவிஞனை
அவகைள் திட்டித் தீர்க்கின்றன.
எதுவும் தன் காதில் விழாதது போல
பிரசுரமான அந்தக் கவிதைக்கான
சன்மானம் எப்போது வரும்
காத்திருக்கத் தொடங்குகிறான்
அந்தக் கவிஞன்.
*****

No comments:

Post a Comment

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? நேற்றைய விவாதத்தை நாம் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழ...