கட்டிங்
ஆளுக்கொரு
நாள் என்று இருபது பேராக சேர்ந்து கட்டிங் அடித்து விட்டு இரண்டாயிரம் நோட்டைக் கொடுத்து
சில்லரை பிரச்சனை இல்லாமல் செய்து கொண்டனர் விசுவாச குடிமக்கள்.
*****
பயணம்
முதலில் கிளம்பிய பேருந்து
கடைசியாகப் போய் சேர்ந்தது.
*****
இடி
வெளிநாட்டுக்குக் கட்டிட வேலைக்குச்
செல்ல விமானம் ஏற காத்திருந்த கன்னியப்பன் தலையில் இடிந்து விழுந்தது விமான நிலையத்தின்
மேற்கூரை.
*****
No comments:
Post a Comment