அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு ட்வீட்
போட்டாலும் இந்தியப் பங்குச்சந்தை விழுகிறது, இந்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல்
செய்தாலும் விழுகிறது என்றால், இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?
பங்குச்
சந்தை என்பது முன்னோக்கி வேகமாகச் செல்லும் அதிவேக வாகனத்தின் முகப்புக் கண்ணாடி போன்றது.
பார்க்கையில் பளிச்சென்று முதலில் அதுதான் தெரியும். அந்த முகப்புக் கண்ணாடியில் வாஷிங்டனிலிருந்து
கல் எறிந்தால் என்ன, டெல்லியிருந்து கல் எறிந்தால் என்ன? அது உடையத்தானே செய்யும்.
ஆக்சிடென்ட் ஆகி கண்ணாடி உடைகிறது என்பதற்காக முகப்புக் கண்ணாடி இல்லாமல் வாகனத்தில்
பயணிக்க முடியுமா?
*****
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக்
கொடுக்கப்படும் வரிச் சலுகையில் பாதியாவது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?
கார்ப்பரேட்
வரிச் சலுகை என்பது ஐந்து வருட முதலீட்டுக்கான நிச்சய உத்தரவாதம். இன்றைக்குக் கொடுத்தால்
ஐந்து வருடம் கழித்துத் தேர்தல் நிதியாகத் திரும்பி வரும் என்று அது ஒரு கணக்கு. ஆனால்
பெட்ரோல் விலை குறைப்பு என்பது இன்ஸ்டன்ட் காபி போல, மக்களுக்கு உடனடி சந்தோசம் தரும்
வஸ்து. பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது என்பது போல, ஐந்து வருடம் கழித்து தேர்தலுக்கு
உதாவது என்று இது வேறு கணக்கு. அரசியலில் கூட்டிக்
கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வர வேண்டும். அரசியல்வாதிகளுக்கு முன்னதில் கணக்குச்
சரியாக வரும், பின்னதில் அப்படி வராது. அரசியல்வாதிகள் பள்ளிக் கணக்கில் லேவடியாக இருக்கலாம்,
ஆனால் புள்ளிக் கணக்கில் கில்லாடிகள். அதனால் பெட்ரோல், டீசலுக்கு வரிச் சலுகையெல்லாம்
நஹி போத்தா ஹைதான். சாமனியன் வாழ்க்கை என்பது காஸ்ட்லி பெட்ரோல், டீசலில் பரதேசிக்
கோலத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கதைதான்.
*****
இப்போதெல்லாம் பட்ஜெட் எப்படி இருக்கிறது?
சேமிக்கும்
இந்தியாவைச் செலவழிக்கும் இந்தியாவாக மாற்றிக் கொண்டு இருக்கிறது.
*****
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு
ஒருவேளை நோபல் கமிட்டியே மனம் உவந்து நோபல் பரிசைத் தூக்கிக் கொடுத்தால் என்ன நடக்கும்?
மூன்றாம்
உலகப் போர் முடிந்து நான்காம் உலகப் போர் நடக்கும்.
*****
சிறந்த மாடுபிடி வீரர்களை அரசாங்க
அலுவலகத்தில் போட்டால் என்ன நடக்கும்?
காளைகளை
அடக்கியவர்கள் அரசாங்கத்து பைல்களை அடக்க முடியாமல் வாடிவாசலே போதும், அரசாங்க வாசல்
வேண்டாம் என ஓடி விடலாம். காளையையே அடக்கியவர் நம்மை எப்படியெல்லாம் அடக்குவாரோ என
உடன் பணியாற்றும் ஊழியர்கள் லீவ் எடுத்து எஸ்கேப் ஆகி விடலாம். அட, ஆடு மாடுகளை வைத்து
மாநாடு போட்ட நமக்கு இந்த ஐடியா தோன்றாமல் போயிற்றே என்று சீமான் கூட ஒரு நிமிடம் ஜெர்க்
ஆகலாம்.
*****

No comments:
Post a Comment