பதுங்கிக் கிடக்கும் மண்வாசம்
வியர்வை
வாடை ஒட்டாத
மின்விசிறி
சுழலும்
குளிரூட்டப்பட்ட
தெர்மாஸ்
பிளாஸ்க் அறையில்
கண்ணாடி
சன்னலைச் சற்றே திறக்க
ஹைட்ரோ
கார்பனின் டீசல் வாசனை
சட்டென்று
எட்டிப் பார்க்க
அதை
நறுமணமூட்டியின் வாசனையில்
முக்கி
மூழ்கடித்து வைத்திட
வெளியே
தகித்துக் கொண்டிருக்கும் பூமியின்
பிம்பங்களின்
அகதிகள் போல் மனிதர்கள் இருக்க
கோடைமழை
பொழியும் இந்நாளில்
டைல்ஸ்
பதித்த தரைக்கடியில்
பதுங்கிக்
கிடக்கிறது
மண்வாசம்
*****

No comments:
Post a Comment