18 Aug 2026

அம்மரத்து அக்குருவிகள்

அம்மரத்து அக்குருவிகள்

புது வீடு கட்ட வேண்டும்

என்ற அம்மாவின் ஆசைக்கு

அப்பா ஆசையாய் நட்டு வைத்த

வேப்பமரத்தின் மீது

கோடரியை வைத்தார் பில்டர்

வீட்டைக் கட்டி முடித்ததும்

அலைபேசியில் அனைவரிடமும்

அது பற்றி பேசி பேசி மாய்ந்து போது

அந்த டவர் வழியே சென்று கொண்டிருக்கும்

சைகைகள் வழி அறியாமலே

கீச்சிட்டுக் கொண்டிருந்தன

அம்மரத்திலிருந்து

செல்போன் டவருக்கு

வீடு மாறிக் கொண்ட

அக்குருவிகள்

*****

No comments:

Post a Comment