நெஞ்சாற்றுப்படை
பலருக்கும்
ரத்தத்தைப் பார்த்தால் பயம்
இது
தெரியாமலா
கண்ணுக்குத்
தெரியாமல்
தோலுக்குள்
ஓட விட்டிருப்பார் கடவுள்
*
எதை
வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன்
கவிதைக்கு
விளக்கம் சொல்வதைத் தவிர
*
நல்ல
நேரத்தில் கவிதை
காட்டாறாய்
கிளம்புகிறது
மனைவி
வந்துவிடுகிறார்
திட்டித்
தீர்ப்பதற்கு
பாவம்
கவிதை
வாசல்
வரை வந்து
அவமானப்பட்டுத்
திரும்புகிறது
மதியாதார்
தலைவாசல்
இனி
மிதியுமோ கவிதை
*
மழையில்
நனைவது பிடிக்கும் என்றாய்
சரி
நனைந்து தொலை என்றேன்
மறுநாளே
ஜலதோசம் என வந்து நிற்கிறாய்
*
கவுண்டமணி
வடிவேலு
சந்தானம்
இல்லாத குறையை
அரசியல்வாதிகள்
தீர்த்து வைப்பார்கள்
*****
No comments:
Post a Comment