தண்ணீரில் வாழும் தாவரம்
நிரம்ப
மழை பெய்து
நீர்
தேங்கினால் அழுகி விடும் என்று
அழுது
கொண்டே சொன்னாய்
நான்
நீருக்குள் வாழும்
தாவரங்களை
நினைத்துக் கொண்டேன்
*****
கருப்புக் கொடி
சூரியனுக்கு
ஒரு
கருப்புக்கொடி
இந்த
நிழல்
*****
நெரிசல் பிராணிகள்
கொட்டித்
தீர்க்கிறது மழை
சுட்டெரிக்கிறது
வெயில்
கூட்டங்களால்
நிரம்பி வழிகிறது பயணம்
நெரிசல்களுடன்
நிகழ்கின்றன
கடைவீதி
அனுபவங்கள்
மனிதர்கள்
பெருங்கூட்டத்தில்
நெருக்கி
அடித்துக் கொண்டு வாழும் பிராணிகள்
*****
No comments:
Post a Comment