6 Oct 2026

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு

பூக்களின் விலை கேட்பதில்லை

வாசனைக்குச் செஸ் வரி செலுத்துவதில்லை

தேனைச் சுவைக்கையில்

ஜிஎஸ்டி எதுவும் கொடுப்பதில்லை

பலவண்ணப் பெயிண்டிங்கிற்கு

காப்பிரைட்டும் இல்லாமல்

பட்ஜெட் பற்றியோ

வர்த்தக ஒப்பந்தம் பற்றியோ

டிரம்ப் பற்றியோ

ஏறி இறங்கும் தங்கம் பற்றியோ

எந்தக் கவலையும் இல்லாமல்

முட்காட்டில்

பட்டாம்பூச்சி ஒன்று

பறந்து திரிகையில்

ஏசி அறையில்

சுழல்கின்ற

சொகுசு நாற்காலியில்

அமர்ந்திருக்கும்

மனுஷப் பயல் ஒருவனின் இதயம்

பட்டாம்பூச்சியின் சிறகுகளை விட

படுமோசமாக படபடத்து

சட்டென நின்று போகிறது

*****

No comments:

Post a Comment