என்னதான் நடக்கிறது அந்த வளைகுடாவில்?
அந்த
பிப்ரவரி 28,
யாரும்
எதிர்பார்க்காத நேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மிக முக்கியமான
மையங்கள் மீது வான்வழித் தாக்குதலைத் நடத்தின.
ஈரானின்
உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்ட செய்தி வந்தபோது, உலகம் ஒரு நிமிடம் ஹேங் ஆகிவிட்டது.
எதற்கும்
அசையாத டெஹ்ரானின் வீதிகள் இப்போது கரும்புகையால் நிறைந்திருக்கின்றன.
ஈரான்
சும்மா இருக்குமா? அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் ஹோர்முஸ் நீர்ச்சந்தி.
உலகத்தின்
ஆயில் டேங்கர்கள் செல்லும் அந்தச் சின்னப் பாதையை ஈரான் லாக் செய்துவிட்டது.
நீ என்னை
அடித்தால், நான் உனக்கு பெட்ரோல் தரமாட்டேன் என்கிற பழைய அசிமெட்ரிக் ஸ்ட்ராடெஜிதான்.
18க்கும்
மேற்பட்ட வணிகக் கப்பல்கள் இதுவரை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. நம் ஊரில் பெட்ரோல்
விலை ஏறப்போவதற்கு இதுதான் மெயின் ரீசன்.
ஈரான்
இப்போது ஆயிரக்கணக்கான ட்ரோன்களை ஏவுகிறது. ஒரே நேரத்தில் ஈக்கள் போலப் பறந்து வரும்
இந்த ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்துவது ரேடார்களுக்குக் கூடச் சிரமம். இதற்குப் பதிலடியாக,
அமெரிக்காவின் சென்ட்காம் ஈரானின் 30க்கும் மேற்பட்ட கண்ணிவெடிப் படகுகளை ஒரே நாளில்
காலி செய்திருக்கிறது.
வாஷிங்டனில்
அதிபர் ட்ரம்ப் தனது பாணியிலேயே காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஈரான் ஆட்சியை மாற்றுவோம்
என்று ஒரு பக்கம் கர்ஜனை, இன்னொரு பக்கம் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது துல்லியமான
தாக்குதல். இதற்குப் பெயர்தான் எஸ்கலேட்டரி லேடர். ஒவ்வொரு நாளும் ஏணிப்படியில் ஏறுவது
போலப் பதற்றம் ஏறிக்கொண்டே போகிறது.
யுத்தம்
என்றால் பழைய படங்களில் வருவது போல வீரர்கள் நேருக்கு நேர் சண்டையிடுவது கிடையாது.
இது க்ளிக் செய்தால் வெடிக்கும் யுத்தம்.
டெஹ்ரானில்
ஓர் அணுசக்தி மையம் தகர்க்கப்பட்டால், இங்கே சிட்னி ஏர்போர்ட்டில் டேட்டா கம்பிளீட்டாகக்
கரப்ட் ஆகிறது. எல்லாம் ஒரு பெரிய சிலந்தி வலை போலப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
அறிவியல்
இன்று ஒரு மனிதனை அவன் வீட்டில் இருக்கும்போதே டிரோன் மூலம் தேடிக் கண்டுபிடித்துத்
தாக்கப் பயன்படுகிறது.
இந்தப்
போர்ச் செய்திகளைப் படிக்க படிக்க பத்தற்மதான். ஆனால், உலகம் எப்போதும் இப்படித்தான்
– ஒரு பக்கம் வினாசம், ஒரு பக்கம் வளர்ச்சி. இந்த யுத்தம் கார் டயரில் இருக்கும் காற்றைக்
கூடப் பாதிக்கும், பெட்ரோல் தட்டுப்பாட்டால்!
யுத்தம்
என்பது இப்போது வீரத்தைப் பொறுத்தது அல்ல. அது வோல்டேஜ் மற்றும் வேவ்லென்த் பொறுத்தது.
ஒரு பக்கம் சிலிக்கான் வேலி டெக்னாலஜி, இன்னொரு பக்கம் விடாப்படியான நிலத்தடி ரகசியங்கள்.
அமெரிக்காவின்
ராணுவம் ஒரு மல்டி கோர் பிராசஸர் போல. F-35 மற்றும் B-21 ரக விமானங்கள். ரேடார்களில்
இவை ஒரு சின்ன காக்கா அளவுக்கே தெரியும். ஈரானின் வான் பாதுகாப்பு அரண்களைத் தெரியாமலேயே
ஊடுருவும் கோஸ்ட் மெஷின்கள் இவை.
அமெரிக்காவின்
கண்கள் வானத்தில் இருக்கின்றன. ஈரானின் மொபைல் போன் சிக்னல் முதல் ஏவுகணை ஏவுதளம் வரை
ரியல் டைம் கண்காணிப்பு. நீ எங்கே இருக்கிறாய்? என்று தேட வேண்டியதில்லை, நீ இங்கேதான்
இருக்கிறாய் என்று ஜூம் செய்து பார்ப்பார்கள்.
இது
சைபர் போரும் கூட. ஒரு வைரஸ் மூலம் ஈரானின் ஒட்டுமொத்த கம்யூனிகேஷன் கிரிட்டையும் ப்ளூ
ஸ்கிரீன் ஆக்கிவிட முடியும்.
ஈரானையும்
குறைத்து மதிப்பிட முடியாதே. அமெரிக்கா ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் என்றால், ஈரான் ஒரு
புத்திசாலித்தனமான ஹேக்கர்.
ஈரான்
தனது ஏவுகணைகளை தரைக்கு அடியில் மலைகளுக்குள் சுரங்கம் தோண்டி மறைத்து வைத்திருக்கிறது.
அமெரிக்காவின் சாட்டிலைட்களால் கூட எட்டிப் பார்க்க முடியாத ஆழம். இவர்களின் பத்தாஹ்
ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லும்.
விலையுயர்ந்த
ஏவுகணைகளை விட, மலிவான ட்ரோன்கள் ஈரானின் பலம். ஒரு 500 ட்ரோன்களை மொத்தமாக ஏவினால்,
அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு சிஸ்டமே குழம்பிப் போய் ஹேங் ஆகிவிடுகிறது.
ஈரானின்
டெக்னிக் என்பது பிராக்ஸி வார். இதுதான் அவர்களின் ஆகச்சிறந்த ஸ்ட்ராடெஜி. லெபனான்
முதல் ஏமன் வரை தங்களுக்குச் சாதகமான குழுக்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவைச் சுற்றலில்
விடுவது. நாங்கள் அடிக்க மாட்டோம், ஆனால் அடி விழும் என்கிற தந்திரம்.
இந்த
இரண்டுக்கும் நடுவில் மாட்டுவது என்னவோ டேட்டா பேஸ்தான்.
அமெரிக்காவிடம்
பணம் இருக்கிறது, ஈரானிடம் அடங்காத குணம் இருக்கிறது. ஒரு பக்கம் ஹை டெக் ஆயுதங்கள்,
இன்னொரு பக்கம் லோ டெக், ஆனால் சக்தி வாய்ந்த தந்திரங்கள்.
அறிவியல்
முன்னேற்றம் என்பது ஒரு கட்டத்தில் நம்மையே பயமுறுத்தத் தொடங்குகிறது. ஒரு பட்டனை அழுத்தினால்
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு நகரம் அழியும் என்பது சாதனையா அல்லது
வேதனையா?
யுத்தம்
என்பது எப்போதும் ஒரு ஜீரோ சம் கேம். இறுதியில் ஜெயித்தவனுக்கும் இழப்பு உண்டு, தோற்றவனுக்கும்
இழப்பு உண்டு.
போரின்
விளைவுகளைக் கூட்டிக் கழித்து, பெருக்கு வகுத்து, வர்க்கமூலம் வரை போய் பார்த்தால்,
அணு ஆயுதங்களை விட, மனிதநேயம்தான் உலகைக் காக்கும் இறுதி மென்பொருள். ஆனால் இதை இன்ஸ்டால்
செய்யத்தான் யாரும் முன்வருவதில்லை.
*****

No comments:
Post a Comment