ஹாலிவுட் சிண்ட்ரோம் – ஏன் இவர்கள் கீழே விழுகிறார்கள்?
முதலில் ஒரு பிளாஷ்பேக். மர்லின் மன்றோ தொடங்கி இன்றைய பிரிட்னி ஸ்பியர்ஸ் வரை
எல்லாருக்குமே ஒரே பேட்டர்ன். உச்சகட்ட புகழ், கணக்கில்லாத பணம், அப்புறம் திடீரென்று
ஒரு நாள் போலீஸ் லாக் அப் அல்லது போதைப்பொருள் ஓவர் டோஸ். இது ஏன்? இதுதான்
ஹாலிவுட் சின்ட்ரோம்.
நமது மூளையில் டோபமைன் என்று ஒரு கெமிக்கல் இருக்கிறது. இதுதான் மனுஷனக்கு ரிவார்டு
சிஸ்டம். ஒரு சாதாரண மனுஷனுக்கு ஒரு நல்ல காபி குடித்தால் சுரக்கும் டோபமைன், இந்த
ஸ்டார்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தும்போது பிளட் பிரஷர் போல எகிறும்.
புகழ் குறையும்போது அல்லது தனிமை வரும்போது, அந்த டோபமைன் லெவலை மெயின்டெய்ன்
செய்ய மூளை அடம் பிடிக்கும். அங்கேதான் ஆல்கஹாலும், ஆட்ரலும் என்ட்ரி கொடுக்கின்றன.
மூளை ஒரு போதை அடிமை ஆகிறது.
ஹாலிவுட்டில் இதற்கு கோல்டன் கேஜ் என்று பெயர்.
அதென்ன கோல்டன் கேஜ் என்கிறீர்களா?
சுற்றிலும் ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால், உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
சொல்வதை விட, உன் புகழை எனக்குப் பிடிக்கும் என்று சொல்பவர்களே அதிகம் இருப்பார்கள்.
இது ஒரு வகை தங்கச் சிறை.
பிரிட்னி ஸ்பியர்ஸின் 200 மில்லியன் டாலர் டீல் போல, பெரிய தொகை வரும்போது கழுகுகள்
தானாக வரும்.
நீங்கள் குளிப்பதைக் கூட ஒரு பப்பராஸி படம் எடுப்பான் என்றால், யாருக்குத்தான்
மூளை குழம்பாது?
சாதாரண மனிதன் விழுந்தால் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு செலிபிரிட்டி விழும்போது
அது பிரேக்கிங் நியூஸ். பிரிட்னி மொட்டையடித்துக் கொண்டபோது உலகம் சிரித்தது. ஆனால்
அது உண்மையில் ஒரு சைக்கோடிக் பிரேக். மனதின் ஒரு பகுதி உடைந்து சிதறுவதன் வெளிப்பாடு.
மொத்தத்தில் இதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்சஸ் ரேட் மிகக் குறைவு. அதே
நேரத்தில் ஸ்ட்ரெஸ் லெவல் ரொம்பவே அதிகம். இதற்குத் தீர்வு என்று பார்த்தால், ஒரு நல்ல
மனநல மருத்துவர் + உண்மையான நட்பு. இது இரண்டுமே ஹாலிவுட்டில் கிடைப்பது
அபூர்வம்.
இதைப் பற்றி என்ன சொல்வது?
புகழ் என்பது ஒரு எலக்ட்ரிக் சேர் மாதிரி. உட்கார்ந்திருக்கும் வரை கெத்து.
சுவிட்ச் போட்டால் காலி.
பிரிட்னி போன்றவர்களுக்குத் தேவை மீளுதல் மற்றும் மீட்கொணர்தல் மட்டுமல்ல, நிபந்தனையற்ற
அன்பு. அது மார்க்கெட்டில் கிடைப்பதில்லை.
அதுதான் அங்கு பிரச்சனை. இதனால் இந்த ஹாலிவுட் சின்ட்ரோம்
பலரைப் போட்டுத் தள்ளிக் கொண்டு இருக்கிறது. கோலிவுட்டிலும் இது உண்டே என்கிறீர்களா?
மல்லுவுட், டோலிவுட், சாண்டல்உட் என எந்த உட்டாக இருந்தாலும் புகழ் எனும் உச்சாணிக்
கொம்பில் ஏறும் போது இது ஆட்டமேட்டிக்காக இன்புட் ஆகும்.
“நுனிக்கொம்பர்
ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி
ஆகி விடும்.” (குறள், 476)
என்று வள்ளுவரும் சொல்கிறாரே!
*****

No comments:
Post a Comment