பெயரொன்றிப் போதல்
பெயரென்ன என்றார்
சொன்னதும் அடிக்கத் துவங்கினார்
இனிமேல் இப்படி செய்வாயா
என்று
அடித்தபடிக்கு கேட்டுக் கொண்டேயிருந்தார்
எது போல் எதைச் செய்தேன்
என்று கேட்கும் திராணியின்றி
வலியில் பெருகி வழியில்
குருதியில் மூழ்கிக் கொண்டிருந்தேன்
இவனா அப்படிச் செய்தான் என்பது
போல
அப்பாவி முகம் காட்டுவதாகச்
சொல்லி
அதற்கும் சேர்த்து நான்கு
அடிகள்
எட்டு உதைகள் போட்டார்
மயங்கி விழுந்த பின்
அடித்தது அடித்த படி
உதைத்தது உதைத்த படி
போட்டது போட்ட படி
போட்டுச் சென்றார்
அடி உதைக்கான காரணம்
சில நாட்கள் சென்ற பின் தெரிந்ததும்
காவாளிக்காரன் பெயரை
நீயேன் வைத்திருந்தாய் என்றார்
பெயரொன்றிப் போகும் பாவத்துக்கு
நான் என்ன செய்ய முடியும்
என்று கேட்கவா முடியும் நம்
மனிதர்களிடம்
*****
No comments:
Post a Comment